காலநிலை நீதி: நியாயமான மற்றும் நிலையான எதிர்காலத்தை நோக்கி
கடந்த டிசம்பர் 2022 அன்று சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் காலநிலை பேரணி பல்வேறு சுற்றுச்சூழல் செயல்பாட்டு அமைப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்தப் பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என கணிசமானோர் பங்கேற்றனர். காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் மற்றும் காற்று மாசு, பெரு நிறுவனங்களின் பொறுப்பற்றத்தன்மை, காலநிலை நீதியை நிலை நாட்ட போராடுவது போன்ற வாசகங்கள் பொரித்த பதாகைகளும், முழக்கங்களும் அப்பேரணியில் இடம் பெற்றது.