திருவண்ணாமலையில் குடிமக்களின் நலன்களை பாதுகாக்க உயர் இரத்த அழுத்த விழிப்புணர்வு முகாம்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொற்றாத நோய்களின் சிகிச்சைக்கு கவனம் செலுத்தும் '75/25' என்ற இந்திய அரசின் சமீபத்திய முயற்சியின் தொடர்பாக, சி.ஏ.ஜி மற்றும் சினம் அமைப்புகள் இணைந்து திருவண்ணாமலையில் 'உயர் இரத்த அழுத்தம் - சைலண்ட் கில்லர்' குறித்த விழிப்புணர்வு அமர்வை நடத்தியது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் கிராம மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, உயர் இரத்த அழுத்தத்தின் தீவிரத்தையும், சிகிச்சையின் அவசியத்தையும் பற்றி தெரிந்துகொண்டனர்.