Skip to main content

Dharani Mathivanan, Researcher - Environment and Climate Action

வனங்களில் வீசப்படும் நெகிழி - பல உயிர்களின் அமைதியான மரணம் : வனத்தின் நெகிழி நெருக்கடி குறித்து ஒரு விளக்கம்.

நான் வார இறுதிகளில் வனத்திற்குள் சென்று தன்னார்வலர்கள், வன அதிகாரிகள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது என் வாழ்க்கையின் ஒரு முக்கியமான பகுதி. சுற்றுச்சூழல் பொறியியல் (M.E Environmental Engineering) படித்திருந்தாலும், சில உண்மைகள் புத்தகங்களில் முழுமையாகப் புரியாது. களத்தில் வேலை செய்யும் போது தான் அவை மனதில் ஆழமாக பதிகிறது. அப்படிப்பட்ட ஒரு கடுமையான உண்மை - நெகிழி (plastic) வனவிலங்குகளுக்கு ஒரு “மெல்லக் கொல்லும் நஞ்சு” (slow poison) என்பதை உணர்தேன். இது உடனடி தாக்கத்தை ஏற்படுத்தாததால் பல நேரங்களில் கவனிக்கப்படாது.