பத்திரிகை செய்தி
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைக்காக பங்குதாரர்களை ஒன்றிணைத்தல்
தேதி: ஜனவரி 29, 2024
இடம்: லீ ராயல் மெரிடியன், கிண்டி, சென்னை
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கங்கள், வணிகங்கள், அரசு சாரா நிறுவனங்கள், சமூகங்கள் மற்றும் தனிநபர்கள் உட்பட பல்வேறு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு வேண்டியிருக்கும் ஒரு சிக்கலான பிரச்சினையாகும். ஒவ்வொரு பங்குதாரரும் தனித்துவமான முன்னோக்குகள், பகிரப்பட்ட பொறுப்பு மற்றும் பயனுள்ள செயல்படுத்தல் உத்திகள், விரிவான மற்றும் பயனுள்ள தீர்வுகளுக்கு பங்களிக்கின்றனர். சமூக அமைப்புகள் இந்த செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன, சிறந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி ஆராய்ச்சி நடத்துகின்றன, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக வாதிடுகின்றன, மற்றும் களத்தில் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கின்றன.
இந்த முயற்சியில், சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்க்ஷன் குரூப் (CAG) உரையாடல் மற்றும் கலந்துரையாடலை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) மற்றும் பெருநகர சென்னை காவல்துறை (GCP) அதிகாரிகளுக்கு ஜனவரி 29 அன்று ஒரு கலந்துரையாடல் நிகழ்வை ஏற்பாடு செய்தது.
இந்த விவாதம் CAGஆல் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்தது: ஒன்று காற்றின் தரம் மற்றும் வன்முறைக் குற்றங்களுக்கு இடையே உள்ள தொடர்பை ஆராய்வது, மற்றொன்று தமிழ்நாடு மாசுகட்டுபாடு வாரியத்தின் செயல்பாடுகளை தேர்ந்தெடுக்கப்பட்ட அளவுருக்களின் அடிப்படையில் மதிப்பிடுவது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) மற்றும் TNPCB ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் காவல் துறை வழக்குகள் பதிவு செய்வதில் உள்ள இடைவெளியின் காரணங்களையும் நாங்கள் விவாதித்தோம். TNPCB மற்றும் GCP இன் அதிகாரிகள், காற்றின் தரம் தொடர்பான விவாதத்திற்கு ஒன்றாக அமர்ந்திருப்பது இதுவே முதல் முறை என்று தெரிவித்தனர். TNPCB மற்றும் காவல்துறைக்கு இடையே இதுபோன்ற கலந்துரையாடல் அமர்வுகள், அவர்கள் இணைந்து செயல்படுவதற்கு உதவும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
அமர்வில் கலந்துகொண்ட அதிகாரிகள், யாரும் அதிகம் முக்கியத்துவம் செலுத்தாத தலைப்பை ஆய்வு மேற்கொண்டதற்கு பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும் இந்த ஆய்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டவுடன் அது தங்களுக்குச் நடவடிக்கை எடுக்கக்கூடிய சில செயல்களை அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். சுற்றுச்சூழல் பிரச்சினைகளை வெறும் சுற்றுச்சூழல் மீறல் என்ற கண்ணோட்டத்தில் இருந்து அவற்றை சுற்றுச்சூழல் குற்றமாக அங்கீகரிப்பதற்கான முன்னோக்கை மாற்றுவதற்கான அவசரத்தை அவர்கள் இருவரும் வலியுறுத்தினர், இது பயனுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் கூறினர். கூடுதலாக, எதிர்கால ஆராய்ச்சிப் பணிகளின் பொருத்தத்தை மேம்படுத்தும் முயற்சியில், பங்கேற்பாளர்களிடமிருந்து யோசனைகள் கேட்கப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களை அமல்படுத்துவதில் TNPCB மற்றும் காவல்துறைக்கு இடையேயான ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகளை ஆராய்வதற்கான ஒரு சுவாரஸ்யமான யோசனை விவாதத்திற்கு வந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இந்தப் பரிந்துரை எடுத்துக்காட்டுகிறது.
இந்த கலந்துரையாடலில் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், காற்றின் தரம் மற்றும் வன்முறை குற்றங்கள் மற்றும் TNPCB இன் நிலை குறித்த ஆய்வு அறிக்கைகள் விரைவில் வெளியிடப்படும்.
மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ளவும்: வம்சி கபிலவை: +91 94938 92929 | vamsishankar.kapilavai@cag.org.in
சிஏஜி பற்றி
சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்க்ஷன் குரூப் (CAG) என்பது 38 வருடங்கள் பழமையான ஒரு இலாப நோக்கற்ற மற்றும் அரசியல் சார்பற்ற அமைப்பாகும், இது குடிமக்கள் உரிமைகள் மற்றும் நல்லாட்சிக்காக செயல்படுகிறது. அதன் முயற்சிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் கூட தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தாலும், சென்னையின் நுகர்வோர் மற்றும் குடிமக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இது முதன்மையாக செயல்படுகிறது.