Skip to main content

பத்திரிக்கை வெளியீடு: பிளாஸ்டிக் பிராண்ட் தணிக்கை 2022

Author

 

பத்திரிக்கை வெளியீடு 

சி.ஏ.ஜி'இன் பிளாஸ்டிக் பிராண்ட் தணிக்கை 2022

 

ஜனவரி 23, 2023 

உடனடியாக வெளியீடு 

உலகளாவிய பிளாஸ்டிக் ஒப்பந்த மாநாட்டில் பிளாஸ்டிக் மாசுபாடு குறித்து சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட சர்வதேச முறையாவணத்தை உருவாக்க ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் சபை தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாடு சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்தது. அத்தகைய ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கும், அங்கீகரித்து, நடைமுறைப்படுத்துவதற்கும் நேரம் எடுக்கும் அதே வேளையில், உலகம் மீதும் மனிதர்கள் மீதும் பிளாஸ்டிக் மாசுபாடு ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை முக்கியத்துவத்தின் அடையாளம் ஆகும். பல ஆண்டுகளாக, உலகெங்கிலும் உள்ள அரசு சாரா அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் அக்கறையுள்ள குடிமக்கள், பிளாஸ்டிக் உற்பத்திக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர், பிளாஸ்டிக் மற்றும் நச்சுப் பொறிக்கு முடிவு கட்ட வேண்டும்.

பிராண்ட் தணிக்கை என்பது பிளாஸ்டிக் கழிவு உற்பத்தியில் உற்பத்தியாளர்களின் பங்கை முன்னிலைப்படுத்தவும் அவர்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் கோரும் ஒரு முயற்சியாகும். பிராண்ட் ஆடிட், சிட்டிசன்-சயின்ஸ் முன்முயற்சியில்,  உலகளவில் பிரேக் ஃப்ரீ ப்ளாஸ்டிக் (BFFP) இயக்கத்தால் தொகுக்கப்பட்ட முயற்சியாகும். சி.ஏ.ஜி ஐந்தாண்டுகளாக பிளாஸ்டிக் தணிக்கையின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது. CAG பிராண்ட் தணிக்கை 2022 வட சென்னையில் உள்ள N4 கடற்கரையில் நடத்தப்பட்டது, அங்கு தன்னார்வலர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர், அவை அவற்றின் பிராண்ட் பெயர்களுடன் பதிவு செய்யப்பட்டன; அவர்களின் தாய் நிறுவனங்கள் குறுக்கு சோதனை செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டன.

சி.ஏ.ஜி'இன் 2022 தணிக்கையில், அதிகம் மாசுபடுத்துபவர்கள் பட்டியலில், முதலிடத்தில் சிறு அளவிலான அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களும் இரண்டாம் இடத்தில் பிரிட்டானியா நிறுவனமும், மூன்றாவது இடத்தில் ஆவின் மற்றும் ஐடிசி நிறுவனங்கள்  அதிகபடியான கழிவுகளை வெளியேற்றுவது கண்டறியப்பட்டுள்ளது. சிறு அளவிலான அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளன. தணிக்கை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளில் நான்கில் மூன்றில் ஒரு பங்கு வகை 7 என்று குறிக்கப்பட்டது - மீதம் இருப்பதில் பிளாஸ்டிக் பேக்கேஜிங்கில் ஒன்றுக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் வகைகளால் ஆனது அல்லது பல அடுக்கு பொருட்களின் (பிளாஸ்டிக், அட்டை, காகிதம் போன்றவை) கலவையாக இருந்தது என்பதைக் குறிக்கிறது. இத்தகைய பல அடுக்கு பிளாஸ்டிக் (MLP) மறுசுழற்சி செய்ய முடியாது மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சி துறையில் குறைந்த மதிப்பினை கொண்டது. தணிக்கை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளில் 60% MLP கழிவுகள் உள்ளடங்கியது.

தற்போது, ​​பிளாஸ்டிக் பயன்பாட்டின் ஆபத்தை முறியடிக்கும் வகையில் நுகர்வோர்கள் பொறுப்புணர்வுடன் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது, மறுபயன்பாடு செய்வது மற்றும் மறுசுழற்சி செய்வதை கருத்தில் கொள்ளவேண்டும். மனித வாழ்வின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் பிளாஸ்டிக் வியாபித்திருப்பதால், இது ஒரு வரையறுக்கப்பட்ட விளைவு தீர்வாகும். இந்த முழுச் சுமையையும் நுகர்வோர் மீது பழி சுமத்துவதும் நியாயமற்றது. மறுசுழற்சி செய்வதும் சில நேரம் மட்டுமே வேலை செய்கிறது, அதற்கும் கலப்படமில்லாத தூய பிளாஸ்டிக் தேவைப்படுகிறது, அதே சமயம் கழிவு ஆற்றலுக்கு (குறைந்த கலோரி ஆற்றலை உருவாக்க பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பது) சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அபாயங்களை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் உற்பத்தியின் குழாயை அணைத்து, நிலையான மாற்றீடுகளை ஊக்குவிப்பதே ஒரு உண்மையான தீர்வாகும். தங்கள் தயாரிப்புகளை பிளாஸ்டிக்கில் பேக் செய்யத் தேர்ந்தெடுக்கும் உற்பத்தியாளர்கள், உற்பத்தியின் வாழ்க்கைச் சுழற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் உற்பத்தி செய்யப்படும் கழிவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (EPR), திறம்பட செயல்படுத்தப்பட்டால், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பேக்கேஜிங்கின் இந்த கவனக்குறைவான உற்பத்தியைத் தடுக்க ஒரு சிறந்த வழியாகும். பிராண்ட் தணிக்கையின் கண்டுபிடிப்புகள் உற்பத்தியாளர்கள் நிலையான மாற்று வழிகளில் முதலீடு செய்வதற்கான தெளிவான அழைப்பாக இருக்க வேண்டும்.

ஜனவரி 23 ஆம் தேதி திங்கட்கிழமை, சி.ஏ.ஜி மற்றும் ஜஸ்டிஸ் பஷீர் அகமது சயீத் மகளிர் கல்லூரி இணைந்து நடத்திய நிகழ்வில் இந்த அறிக்கை முறையாக வெளியிடப்பட்டது. திரு. என். மகேசன், தலைமைப் பொறியாளர் (SWM) & நகர திட்டமிடல்,GCC, டாக்டர். பி. ஆஷா லதா MBBS., DPH மண்டல சுகாதார அலுவலர், மண்டலம் 9, GCC மற்றும் திரு. P. நடராஜன், நிறுவனர் & CEO, PUVI எர்த் கேர் சொல்யூஷன்ஸ் விருந்தினர்களாக  கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கல்லூரியின் மாணவிகள் பல்வேறு செயல்பாடுகள் மூலம், ஜீரோ வேஸ்ட் வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ள ஊக்குவிப்பு கொடுக்கப்பட்டன.

சி.ஏ.ஜி'இன் 2022 பிளாஸ்டிக் பிராண்ட் தணிக்கை அறிக்கை இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளவும்.

மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ளவும்: சுமனா– 9445395089 | sumana.narayanan@cag.org.in 

 

சிட்டிசன் கன்சுயூமர் சிவிக் ஆக்க்ஷன் குரூப் 

சிட்டிசன் கன்ஸ்யூமர் & சிவிக் ஆக்க்ஷன் குரூப் (சிஏஜி) என்பது 37 ஆண்டுகால இலாப நோக்கமற்ற, மற்றும் அரசியல் சாராத அமைப்பாகும், இது நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் குடிமக்களின் உரிமை களைப் பாதுகாப்பதற்கும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பங்கேற்பு முடிவு உள்ளிட்ட நல்லாட்சி செயல்முறைகளை மேம்படுத்துவதற்கும் செயல்படுகிறது. 

Licence type
Resource Type