"ஆரோக்கியமான நாளைக்கு இன்று பாதுகாப்பான உணவு" - உலக உணவு பாதுகாப்பு தின இணையவழி கருத்தரங்கம்
உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சிஏஜி மற்றும் நுகர்வோர் உரிமைகள் இயக்கம், சேலம் இணைந்து "தரமான பாதுகாப்பான உணவை உட்கொண்டால், நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ முடியும்" என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கத்தை நடத்தியது. சிறப்பு விருந்தினராக சேலம் உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர். கதிரவன் கலந்துரையாடினார்.