திருவண்ணாமலை மாவட்டத்தில் உயர் இரத்த அழுத்த சிகிச்சை குறித்த நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்
சி.ஏ.ஜி சென்னை மற்றும் சினம் திருவண்ணாமலை இணைந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு வட்டாரம் மற்றும் திருவண்ணாமலை வட்டாரம் உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயர் இரத்த அழுத்த நோய்க்கான சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவ வசதிகளின் நிலையை கண்டறிய சிகிச்சை பெற்றுவரும் பொதுமக்களிடம் ஆய்வு மேற்கொண்டது. இதன் மூலம், நோயின் தீவிரத்தன்மையை எடுத்துக்காட்டி, விழிப்புணர்வு முகம் நடத்தப்பட்டது.