எழுபதுகளின் மெட்ராஸும், இன்றைய சென்னையும் - மாசு பற்றி திரைப்படங்கள் நமக்கு சொன்ன செய்தி - ஒரு பகுப்பாய்வு
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்: தலையில் துண்டு, இடுப்பில் வேட்டி, செருப்பில்லாத வெறும் கால் - 1967ல் ஒரு கிராமத்தான். அவருக்குப் பட்டணம் அவ்வளவு அந்நியமாக இருக்கிறது. சாலைகளையும், கட்டிடங்களையும், பார்த்து அப்படி வியக்கிறார். அங்குள்ள மனிதர்களைப் பார்த்து ஒரு கல்சுரல் ஷாக் அடைகிறார். விறுவிறுவென வெறும் காலில் நடக்கிறார். அண்ணா சாலையில், கூட்டத்தில் தடுமாறி விழுகிறார். பின்பு தலை தூக்கி "மெட்ராஸ்ஸ்ஸ் நல்ல மெட்ராஸ்ஸ்ஸ்!" என்று பாடிக் கொண்டே அன்றைய மெட்ராஸை வலம் வருகிறார் நகைச்சுவை நடிகர் நாகேஷ். இந்த பாடல் அன்றைய மெட்ராஸை எதார்த்தமாகப் படம் பிடித்து இருக்கும்.