Skip to main content

Afroz, Researcher

எழுபதுகளின் மெட்ராஸும், இன்றைய சென்னையும் - மாசு பற்றி திரைப்படங்கள் நமக்கு சொன்ன செய்தி - ஒரு பகுப்பாய்வு  

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்: தலையில் துண்டு, இடுப்பில் வேட்டி, செருப்பில்லாத  வெறும் கால் - 1967ல் ஒரு கிராமத்தான். அவருக்குப் பட்டணம் அவ்வளவு அந்நியமாக இருக்கிறது. சாலைகளையும், கட்டிடங்களையும், பார்த்து அப்படி வியக்கிறார். அங்குள்ள மனிதர்களைப் பார்த்து ஒரு கல்சுரல் ஷாக் அடைகிறார். விறுவிறுவென வெறும் காலில் நடக்கிறார். அண்ணா சாலையில், கூட்டத்தில் தடுமாறி விழுகிறார். பின்பு தலை தூக்கி "மெட்ராஸ்ஸ்ஸ் நல்ல மெட்ராஸ்ஸ்ஸ்!" என்று பாடிக் கொண்டே அன்றைய மெட்ராஸை  வலம் வருகிறார் நகைச்சுவை நடிகர் நாகேஷ். இந்த பாடல் அன்றைய மெட்ராஸை எதார்த்தமாகப் படம் பிடித்து இருக்கும்.

40 வருட கொடுங்கையூர் குப்பைமேட்டிற்கு பயோ மைனிங் தீர்வா?  

பல வருடங்களாக கொடுங்கையூர் மக்கள் இந்த ஒரு வாக்கியத்தை கேட்டு கேட்டு அலுத்து விட்டார்கள் - அதாவது, கொடுங்கையூர் குப்பைமேடு சுத்தமாகிவிடும்; மேலும், அந்த இடத்தில் பூங்கா அமைக்கப்படும். இதை கேட்ட பிள்ளைகளின் பிள்ளைகள் இன்று பள்ளி செல்ல தொடங்கிவிட்டார்கள், ஆனால் அங்கே மாற்றம் ஏதும் நடந்திடவில்லை. இன்று மீண்டும் அந்த வார்த்தைகள் கொடுங்கையூர் வீதிகளில் உலாவருகிறது. இம்முறை கொஞ்சம் மும்முரமாக வேலைகளும் நடந்துகொண்டு இருப்பதால், அங்குள்ள மக்களும் மிகவும் நம்பிக்கையாக உள்ளார்கள்.

குப்பையில் இருந்து மின்சாரம்: புதிய பேராபத்து

உலகின் பல  நாடுகளிலும் துரத்தி அடிக்கப்பட்ட எரிஉலைகள் இந்தியாவில் தலை தூக்குகின்றன. தமிழ்நாட்டில் மற்றும் 57 எரிஉலைகலைத் தொடங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இவையெல்லாம் நம் ஊருக்கு வருவதற்கு முன் நாம் அறியவேண்டியவை என்ன? மக்கள் எதிர்கொள்ளும் பேராபத்துக்கள் என்ன?

Revamping Chennai’s micro composting centers

Nearly 60 percent of municipal waste generated in Chennai is biodegradable waste (See this article for more on Chennai's solid waste management woes) ; this itself shows that half of the city’s solid waste problem can be solved if our biodegradable waste is managed effectively. The different methods we have to treat biodegradable waste are composting, biogas and bio-CNG generation.

Ladoo bhai and his tryst with fast fashion

Our love of fast fashion has far reaching consequences. Find out what happens to the clothes we throw away through the eyes of Laddoo. Laddoo will buy or barter for your castaway clothes, giving them a new lease of life. He is what stands between fast fashion and these excesses ending up in the landfill. And see why North Chennai is an integral part of the second hand clothes market. These neighbourhoods might seem miles away from what you are used to. So come today and take a closer look at those people who live and work here. Their lives make for sweet and spicy tales.

‘Castaway clothes and plastic’

A cycle and a loudspeaker accompany Ladoo as he makes his way around Chennai’s neighborhoods, gathering old clothes. He turns off his loudspeaker around certain homes. ‘They don’t like the noise’, he explains to me, as I stop him for a chat. Laddo has been in this business for twenty five years now. ‘In all this time, people have not changed’, he tells me philosophically. ‘Only my cycle and loudspeaker have’.

"பிளாஸ்டிக் சாமான், பழைய துணி வாங்குறது"

"பிளாஸ்டிக் சாமான், பழைய துணி வாங்குறது…."_ கணீர் கணீர் என்று சின்ன ஒலிபெருக்கியில் கேட்கிறது லட்டுவின் காரமான குரல், சிலர் வீட்டிற்கு அருகில் சென்றால் ஒலிபெருக்கியை ஆஃப் செய்துவிடுவார்; சத்தம் போட்டால் அவர்களுக்குப் பிடிக்காதாம். வடசென்னையின் வீதிகளில் இருபத்தைந்து ஆண்டுகளாக அவரும், அவரது சைக்கிளும், சுழன்று கொண்டிருக்கிறது. ‘மக்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். எனது சைக்கிள் மற்றும் ஒலிபெருக்கி மட்டும் தான் மாறியுள்ளது’ என்கிறார் லட்டு.