ஆரோக்கியமாக இருப்போம், இரத்த அழுத்தத்திலிருந்து விலகி இருப்போம்
இரத்தம், இரத்த நாளங்களில் உடல் முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது. இதயம் துடிக்கும்போது, இரத்தம், இரத்த நாளங்களுக்குள் செலுத்தப்படுகிறது. அவ்வாறு செல்லும் இரத்தம், இரத்த நாளங்களின் உட்புறச் சுவர்களில் கொடுக்கும் அழுத்தம், இரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது, “உயர் இரத்த அழுத்தம்” அல்லது “ஹைப்பர்டென்ஷன்” என்று அழைக்கப்படுகிறது. அதேபோல, உள்சுவர்களுக்கு இரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருந்தால், அது “குறைந்த இரத்த அழுத்தம்” அல்லது “ஹைபோடென்ஷன்” என்று அழைக்கப்படுகிறது.